Tuesday, August 4, 2009

காயமே இது பொய்யடா! காற்றடைத்த பைய்யடா!

காயமே இது பொய்யடா! காற்றடைத்த பைய்யடா!

இந்தத் தத்துவ வரிகள உணர்த்தும் பொருள் மனித வாழ்வு நிலையில்லாதது.
காற்றடைத்த பை? அதற்கான தேடலுக்குக் கிடைத்த பதில்தான் இந்தக் கட்டுரை.

மனித உடம்பின் இயக்கத்திற்கும், உறுப்புகளின் செயல்பாட்டிற்கும்
உறுதுணையாய் இருப்பது:-

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்,
நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன் ஆகிய தச
வாயுக்கள்.

பிராண வாயுவானது இருதயத்திலிருந்து மூக்கு வழியாக மேல் நோக்கி
சஞ்சரித்து, பசி தாகத்தை உண்டாக்கி உணும் உணவினை செரிக்கச் செய்து,
நமக்கு தேவையான சக்தியை வழங்கும்
பிராண வாயுக்கு தூய தமிழில் உயிர்க்காற்று என்று பெயர்.

மலக் காற்று என்று அழைக்கப்படும் அபான வாயுவானது மனித உடலில் இருந்து
மல மூத்திரங்களை வெளியே தள்ளும் பணியினை செய்து வருகிறது.

வியானன்: உடலின் அனைத்துப் பகுதியிலும் சஞ்சரிக்கும் இந்த வாயுவானது,
உண்ட உணவைத் திப்பி வேறாகவும், சாறு வேறாகவும் செய்து கொண்டிருக்கும்.
இது தொழில் காற்று என்று அழைக்கப்படும்.

உதானன்: ஒலிக்காற்று என்றழைக்கப்படும் இந்த வாயு, செரிமானத்திற்கு உதவி
புரிய, வயிற்றில் உள்ள வெப்ப சக்தியை எழுப்புவதுடன், உணவின் சாரத்தை
உடலின் பாகங்களுக்கு அனுப்பும். மேலும் இது ஓசையோடு கலந்து குரல் ஒலியை
எழுப்பும்.

சமானன்: நிரவுக்காற்று என்றழைக்கப்படும் இந்த வாயு, உதான வாயு அனுப்பும்
உணவின் சாரத்தை உடலில் உள்ள நாடி நரம்புகளுக்கு சமமாகப் பங்கிட்டு உடலை
வளர்க்கும்.

விழிக்காற்று என்றழைக்கப்படும் நாகன் கழுத்தில் இருந்து வாந்தியை
உண்டாக்கும். கண்களினால் பார்க்கச் செய்யும். முக்கல், சோம்பல்
முதலானவற்றை உண்டாக்கும்.

கூர்மன்-இமைக்காற்று: இது கண்களிலிருந்து திறக்கவும், மூடவும் செய்யும்.
மகிழ்ச்சி(புளகம்), சிரிப்பு, முக லட்சணம் முதலியவற்றை உண்டாக்கும்.

தும்மற் காற்றான கிருகரன் மூக்கிலிருந்து, குருகுருத்து தும்மலை
உண்டாக்கும்.

தேவதத்தன்-கொட்டாவிக்காற்று . இது கொட்டாவியையும், விக்கலையும்
உண்டாக்கும்.

பத்தாவதாக இருக்கும் தனஞ்சயன் என்னும் வீங்கல் காற்று மனித வாழ்வில்
இரண்டு முக்கிய பணிகளைப் புரிகிறது.கருப்பையிலிருந்து குழந்தையை வெளியே
தள்ளும் இதே காற்று மனிதன் இறந்த பிறகுஅவன் உடலை விட்டு வெளியேறாமல்,
மனித உடலை வீங்கச் செய்தும், நாற்றமெடுக்கும்படியும் செய்தும் அவன்
மேனியைக் குலைக்கிறது.

காற்றடைத்த பையில்தான் எவ்வளவு வேலைகள் நடக்கின்றன? ஆச்சரியமாக இருக்கிறது !

இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Wednesday, July 2, 2008

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!


சங்கராபரணம் ஆதிதாளம்

கண்ணிகள்


1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்!

2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில்
¹
மாண்டோய், நமஸ்காரம்!

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்

ம. வேதமாணிக்கம்


சொல் விளக்கம்

- ஜெகத் திரட்சகனே = ஜெகத்தின் இரட்சகனே

- தருவினில் = மரத்தில்

- சற்குருவே = சமமான குருவே

- அரியசித்தே = அறிவுக்கெட்டா


விளக்கவுரை

  1. அனைத்து/எல்லா உலகத்திற்கும் தேவனே வணக்கம் அனைத்து/எல்லா உலகத்தையும் படைத்தவருக்கு வணக்கம். நிலம், கடல், உயிரினங்கள், வானம், மற்றும் சகலத்தையும் உண்டாக்கின தயாள குணமுள்ள அப்பாவுக்கு வணக்கம்.

  1. மனித உருவம் எடுத்தவரே வணக்கம்

உலகத்தின் இரட்சகரே வணக்கம்

உலகத்தில் மனிதர் வாழ்வு பெற

சிலுவை மரத்தில் மரித்தவரே வணக்கம்

  1. பரிசுத்த ஆவியானவரே வணக்கம்

பரலோகத்தில் தேவனுக்கு சமமானவரே வணக்கம்

ஆவியாய் எங்கள் உள்ளத்தில் வாசம் செய்யும்

என்றும் அறிவுக்கெட்டாதவரே வணக்கம்

  1. மூன்றுத் தொழிலையையும் செய்பவரே வணக்கம்

மூவரும் ஒன்றாய் இருப்பவர்களே வணக்கம்

கர்த்தாக்கெல்லாம் கர்த்தரே, கருணைக் கடலே வணக்கம்

என்றுமுள்ள பிதா, குமாரன், பரிசுத்த ஆவியே, வணக்கம்


இப்பாடல் ஆராதனையின் துவக்கத்தில் அல்லது துதி பாடலாகவோ பாடலாம். திரித்துவ தெய்வமாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போற்றி துதிப்பதே இப்பாடல். பாடலிலுள்ள கருத்துகளை ஒருவர் அறிந்து விசுவசத்தோடு பாடுவாரானால் தேவவாசிர்வாதத்தைப் பெறுவது நிச்சயம்.

Wednesday, April 16, 2008

உன்னதப் பாடல்

உன்னதப் பாடல்
இராகம்: ஹம்சதொனி ரூபக தாளம்
பல்லவி.
மேலான லோகத்தில் வாழும் பரா
மேன்மைகொள் நீ தினமே, மகிபா

சரணங்கள்.
1. கீழே லோகத்தில் சாந்தம் மிகுந்திட
நாளும் நல்லொண்ணம் நரர்கொளவே
சீலா நீதான் வந்தாயிகமே - மேலான

2. உன்னைப் போற்றிற்றோம் நித்தம் தொழுதிகம்
உந்தன் மேன்யைக்காய் மிகப்போம்
சேர்ந்துன் மாட்சி ல்வோம் பலர்க்கு - மேலான

3. கர்த்தா மெய்த்தேவா வானோர் அரசனே
சக்தி கொள்தாதா சதமுளவா
தோத்ரம் செய்வோம் தூயாவுனக்கே - மேலான

4. ஏகன் நன்மைந்தா ஏசு நரசுதா
லோக பாவந்தீர் அயமறியே
வேக மெங்கள் மீதிலிரங்கு - மேலான

5. லோக பாவத்தை நீக்கும் திருபரா
வேகம் அன்பாய்வா உனதடியார்
ஏக்கம் நீக்கு இன்பப்பரனே - மேலான

6. மைந்தா கர்த்தன் நீ மேலோன் வழுவிலன்
துய்ய தெய்வத்தின் வலம் வசிப்போன்
ஐயன் ஆன்மா வோடு மகிழ்வோன் - மேலான

Sunday, April 13, 2008

செந்தமிழ்

தமிழ் வாழ்க... தமிழ் என்றும் வளர்க.
- இளங்கவி